திரு ஆரன்  அவர்கள் எழுதிய கவிதை.
வலைப்பதிவு இணைப்பு ஆரன்

கூந்தல் செழுமை
உடல்நலம் பேசும் 

நெற்றிச் சுருக்கம் 
சிந்தனை உரைக்கும்

 விழியின் மொழியே
 மெய்யிணை ஆளும்

 மூச்சின் ஆழம்
 அழுத்தம் வெல்லும்

 நாக்கின் நீளம்
 நாசம் செய்யும் 

பற்களின் இருப்பு
உணவில் தெரியும் 

 குரலின் தொனியே 
 பெருமை கூட்டும்

 கேட்கும் பொறுமை 
 துயரம் போக்கும்

 தோலின் வனப்பு
 வயதைச் சுட்டும்

 கைகளின் தன்மை
 உழைப்பைக் காட்டும்

 வயிற்றின் அளவு
 வளமையைக் கூறும்

 நிற்கும் நேரம்
 வறுமையை உரைக்கும்

 மனதின் பிம்பம்
 உடல்மொழி கொள்ளும்

 எண்ணும் எண்ணம்
 வாழ்க்கையைச் சொல்லும் 

 -ஆரன் 08.06.2021

Leave a Reply