கல்விகற்க உன்கையில்

கைபேசித் தாங்குடுக்க!


காவலனே நிறமாறி

கள்வனென்று ஆனதென்ன!


தெய்வத்தின் அடுத்தநிலை

குருவென்று நாமுரைக்க!


அரக்கனென உருமாறும்

அவலத்தை என்செய்ய!


அரக்கவதம் செய்வதற்கு

ஆணையொன்றும் இங்கில்லை!


கல்கியொன்று உருவாகக்

காத்திருக்க நேரமில்லை!


காந்தியில்லை எல்லோரும்

அஹிம்சைவழி காத்துநிக்க!


பெண்மணிகள் சக்தியென்று

உரக்கச்சொல்லு உலகிற்கே!


பெண்டிர்க்குத் தீங்கிழைப்போர்

உயிர்ப்போகும் நிலைவந்தால்!


தவறிழைக்க எண்ணமிடும்

நிலையதுவும் மாறிடுமே!


                                         -RK  27.05.2021


Leave a Reply