சுற்றம் மறந்தாய் ! சூழ்நிலை மறந்தாய் !
கடமையை மறந்தாய் ! கனவுகளை மறந்தாய் !
பெற்றோரை மறந்தாய் ! உன்னையே மறந்தாய் !
கைப்பேசியே உலகமெனில், கற்றறிந்தென்ன பயன் !
ஓடி விளையாட மறுத்தாய் ! கைபேசி கைதியானாய் !
கண் வழியே பசியாறி, காற்றை உண்டு வாழ்கின்றாய் !
அமர்ந்த
இடம் நீ மாற மறப்பது
போல்,
ஆரோக்கியம்
உன்வாழ்வில் மறந்திடுமே !
உன் பொறுப்பு, உன் கடமை எனதொன்றும் அறியாமல்
போதையிலே மூழ்கடிக்கும் பேதமை வந்ததென்ன !
ஊருக்கு ஒரு வாழ்வு மையம் குடிநோய்க்கு வந்தது போய்,
இனி வீதிக்கொரு வாழ்வு மையம் இன் நோய்க்குத் தேவையிங்கே!
காலமெல்லாம் பணி செய்ய, தாய் தந்தை வீற்றிருக்க !
காலமெல்லாம் பயணிக்க, காலன் தான் விடுவானா !
நஞ்சு
கலக்க, நாய்கள் காத்திருக்க, நச்சு கலயத்தை
கையில்
குடுக்க, நச்சுக்கிருமி வாய்ப்பளிக்க !
நாகப்பாம்பு
விஷத்திற்கும் மருந்திங்கே உள்ளதடா !
இந்த
நஞ்சறுக்க மருந்திங்கே இல்லையடா !
வீடியோ
கேமாடி, விரல் நீளம் குறைந்து போச்சே !
ஐபில்
யாரோ ஏலமெடுக்க, உன்னை அடகுவைச்சே !
வீதியில் பெண் நடக்க, வீதிக்கொரு நாய் அப்போ !
எண்ணிலடங்கா எச்சங்கள் விரல் நுனியில் வந்ததிப்போ !
மூழ்கிடுவர்
தொடு திரையில் பல்முளைக்கா பாலகரும்,
இளந்தாயும் அவ்விதமே
தொல்லை விட்டால் போதுமென!
தீமையறியா
பெண்பிள்ளை வளர்ந்ததனால்,
தீமை
வித்தொன்று விதைக்கின்றாள் அவள் சேய்க்கு !
நீடுழி
வாழ்கவென பெற்றோர் நினைத்திருக்க !
ஊழைப்
பிழையாக்க, விளைய நீ முயல்வதேன் !
இயங்க
மறுத்தால், எலும்பு கூட துருப்புடிக்கும் !
எழுந்து
நடந்தால், இமயங்கூட கைக்கெட்டும் !
கைவிலங்கு
சாவி உங்கையில் தானிருக்கு !
கண்
திறந்து பாரு, காலமிங்கே காத்திருக்கு !
சிந்தையது
தெளிவானால், உன்சக்தி நீயறிவாய் !
உன்
சக்தி நீயறிந்தால் , உலகமுன் கைவசமே
!
--RK 7- 6 - 2021