இருக்கும் போது இல்லை உணவு
இறந்த பின் உண்டு மதிப்பு
எடுக்கும் அளவு
ஏமாளியை காட்டும்
எழுத்தின் வளமை
அறியாமையின் வறுமை
கட்டிடத்தின் குறை
காசிருந்தால் நிறை
காதலின் குறை
வாழதலில் பிழை
உடைத்த பொருள் சொல்லும்
உடைத்தவரின் கோபத்தை
ஒப்பனை அழியும்
விழாவின் முடிவில்
கற்பனை குறை
தேடலின் தொய்வு
வேளாண்மை பெருகின்
நூலாண்மை ஓங்கும்
பாநூல் கொடுத்ததை
பகைவனாலும் அழிக்கலாகாது
நின்றவர் வீழலாம்
வீழ்ந்தவரும் வாழலாம்
வெற்றி கிடைத்ததும்
ரேகையை பேசுவர்
ஏணி பிடித்தவரின் மகிழ்ச்சி
எறியவரின் வெற்றியில்
மனைவாசலின் அழகு
மனவாசலில் இருப்பதில்லை
காக்கை அறியும்
அழையா விருந்தாளி அதில்லையென்று
உழைப்பின் வலி
உறக்கத்தில் சுகம் தரும்
நிறைவாய் வாழ
பொருளிங்கு தேவையில்லை
உள்ளே புழுங்கினால்
தென்றலும் தீயாகும்
பொழுதை போக்கலே
ஆக்குவதென்று ஆயிற்று
கிடைப்பது சரியென்று
மற்றதை மறக்கலாம்
நல உணவு கிழவிக்குள்ளே
கிழவிக்கில்லை நல்ல உணவு
நெகிழ்விருந்தால் வாசி நூலும் தைக்கும்
இறுகியிருந்தால் ???
-RK -19-06-2021
ஆரன் கவிதை
படையலைப் பொறுத்தே
இறந்தவரின் மதிப்பு
கொடுக்கும் அளவு
பிடித்தவரைக் காட்டும்
எழுத்தின் வளமை
படித்ததைச் சொல்லும்
கட்டிடமும் காதலும்
கட்டியபின் தெரியும்
உடைபட்டவை மதிப்பு
உடைத்தவரைப் பொறுத்து
ஒப்பனை அளவு
விழாவின் முடிவே
கற்பனை வளம்
வறுமைக்கே வரம்
நூலாண்மை நோக்கின்
வேளாண்மை பெரிது
பூநூல் தடுக்கும்
பாநூல் கொடுக்கும்
பனை வீழ்ந்தாலும்
உயரத்தில் விட்டமாகும்
ரேகை அழிந்ததும்
வெற்றி கிடைத்தது
ஏணியைப் பிடித்தவர்
ஏறியவர் அறியார்
கறை மனவாசலுக்கு
அல்ல, மனைவாசலுக்கு
கஞ்சன் வீட்டில்
காக்கையும் அமராது
உழைப்பின் வலியை
உழைத்தே போக்கு
நிறைவாய் வாழ
சிறிதாய் வேண்டு
தென்றலை உணர
புழுக்கம் வேண்டும்
பொழுதை ஆக்குவதே
போக்குவதில் இல்லை
ஒன்றே சரியென்றால்
மற்றொன்று கிடையாது
கிழவிகளே நல
உணவின் ஆவணம்
நேர்த்திக்கடன் பெரும்பாலும்
நேர்ந்தவர்க்கு இல்லை
ஊசி நூலால் தைக்கும்
வாசி நூலே தைக்கும்
-ஆரன் 15.06.2021