சொல்லாத சொல்

கிடைக்காத பொருள்

அழகான பொய்

ஆடம்பர வாழ்க்கை

உதட்டு நுனி ஆங்கிலம்

விலையுயர்ந்த உணவு

கேட்டதால் செய்த உதவி

நன்கொடை கேட்கும் பள்ளி

வருமானம் தரும் படிப்பு

வணக்கம் போடும் பதவி

முன் பதிவு கிடைக்கா மருத்துவம்

கையேந்தா தந்தை

அன்பில்லா அம்மா

சம்பாதிக்கும் மகன்

சீர் கொடுக்கும் அண்ணண்

வசதியான மருமகள்

குறை காணும் மருமகன் 

படுக்காத பாட்டி

ப்ராண்டுகளுக்குள் இளைஞன் 

மேல் நாட்டு உறவுகள்

கேட்காத கடன்

கூட்டம் நிறைந்த கோவில்

வேண்டுவன தரும் சாமி

ஊடகங்களில் உழவன்


--RK- 27-06-2021


Leave a Reply